குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து கடந்த 12 மாதங்கள் உங்களுக்கு கலவையான பலன்களை தந்திருப்பார்கள். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உங்களுக்கு நிதி நிலையில் வளர்ச்சியும், உதவியும் செய்திருப்பார்கள். எனினும், கடந்த ஒரு வருடம் உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்திருக்கும்.
குரு தற்போது உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயருகின்றார். குரு உங்கள் ஜென்ம ராசியை 7 வருடங்களுக்கு பிறகு பார்வை இடுகிறார். இதனால் உங்களுக்கு மீண்டும் அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் ஜனவரி 23, 2020 அன்று சனி பகவான் மகர ராசிக்கு பெயருவதால், உங்களுக்கு சிறப்பாக உள்ளது, முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் 2020ல் சஞ்சரிப்பதால், உங்கள் வாழ்க்கையில் அதிக நேர்மறை மாற்றங்களை சந்திப்பீர்கள்.


உங்களுக்கு நீண்ட காலமாக இருந்த பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களை சந்திப்பீர்கள். புது வீட்டிற்கு குடி பெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளி நாட்டு பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு பலமாக உள்ளது. மொத்தத்தில் 2020 உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த வருடமாக இருக்கும்.


Prev Topic

Next Topic