குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை உடல் நல பிரச்சனைகள், அலுவலகத்தில் அரசியல் (40 / 100)


இந்த காலகட்டத்தில் குரு மகர ராசிக்கு பெயருவார். குரு ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் விரைவாக குணமடைய உதவி செய்வார். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற நீங்கள் அதிக பொறுமையோடு இருக்க வேண்டும்.
உங்கள் வேலை சுமையும், அலுவலகத்தில் அரசியலும் அதிகமாகும். அலுவலகத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டு, உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். எனினும், இது தற்காலிகம் தான். நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் நன்றாக இருப்பதால், நீங்கள் வேறு வேலை தேட வேண்டிய அவசியம் இல்லை. தொழிலதிபர்கள், வளர்ச்சியில், அதிகரிக்கும் போட்டியால், சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் செலவுகள், எதிர் பாராத மருத்துவ செலவு, பயணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதால் அதிகரிக்கக் கூடும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரிக்கும். உங்கள் வங்கிக் கடன் அதிக ஆவணங்கள் தேவைப்படுவதால், ஒப்புதல் பெற அதிக தாமதம் ஆகலாம். பங்கு சந்தை வர்த்தகத்தை இந்த பாகத்தில் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீண்ட கால முதலீடுகள் செய்ய முயற்சிக்கலாம். எனினும், உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் இந்த பாகத்தில் உங்களுக்கு சில நட்ட்டங்கள் ஏற்படக் கூடும். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை இந்த பாகத்தில் தவிர்ப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic