![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
குரு உங்கள் ராசியின் 5ஆம் இடத்திலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், தொலை தூர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். பயண சீட்டு முன் பதிவு, தங்கும் விடுதி முன் பதிவு மற்றும் வாகனம் வாடகைக்கு எடுப்பது போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். தேவையற்ற பயம் மற்றும் பதற்றங்களில் இருந்து ஜனவரி 2020 வாக்கில் வெளி வருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள.
உங்களுக்கு விசா குறித்து ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். விசா ஸ்டம்பிங் செய்ய இது நல்ல நேரம். உங்கள குடியேற்ற பலன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். புது வாகனம்/கார் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள.
Prev Topic
Next Topic