![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | வேலை மற்றும் உத்தியோகம் |
வேலை மற்றும் உத்தியோகம்
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை உண்டாகி இருந்திர்ப்பார்கள். எனினும் சனி பகவான் மற்றும் கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை உண்டாகி இருந்திருக்கக் கூடும். இதனால் அலுவலகத்தில் உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், ஆர்வம் குறைந்து காணப்பட்டிருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்கி தந்திருப்பார்.
புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்ய இது ஏற்ற நேரம். நீங்கள் ஜனவரி 2020க்கு மேல் புது வேலைக்காக நேர்காணலில் கலந்து கொண்டால், அதிக முயற்சி இன்றி எளிதாக தேர்ச்சிப் பெறுவீர்கள். நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் புது வேலை வாய்ப்பு நீங்கள் விரும்பிய இடத்திலேயே கிடைக்கும். வெளிநாடு செல்லவும் உங்களுக்கு வாய்புகள் கிடைக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளர் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்களது கடுமையான உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். 2020ல் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
சனி பகவான், குரு மற்றும் கேது ஆகிய அனைத்து முக்கிய கிரகங்களும், ஜனவரி 2020 முதல் நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தலாம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிபதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களுக்கு மேலாளர் பதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒப்பந்தம் அடிப்படையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அது நிரந்தரமாகும். உங்களுக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்சூரன்ஸ், பங்கு சந்தை, விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் பெறுவதில் நல்ல வாய்ப்புகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும்.
Prev Topic
Next Topic