குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

தொழில் அதிபர்கள்


குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவதால், தொழிலில் உங்களுக்கு கிடைத்த ஒளி மிகுந்த காலம் தற்போது மாறும். வரவிருக்கும் சனி பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பாக இல்லை. அதனால், தொழிலதிபர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும். நீங்கள் உங்கள் தொழிலை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால், உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை முதலில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சிறு தவறுகளாலும், போட்டியாளர்களாலும், நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். உங்களுக்கு எதிரான சதியால், தவறான குற்றங்கள் உங்கள் மீது சாற்றப் படலாம்.
உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகக் கூடும். மோசமான சூழலில், நீங்கள் சட்ட உதவியை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகும். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் உண்டாகலாம். ஆகஸ்ட் முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் பணம் குறித்த விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம். உங்கள் நிதி தேவைகளை சந்திக்க பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அரசு அறிக்கை, அரசு திட்டங்களில் மாற்றங்கள், பண மதிப்பிழப்பு, மற்றும் பிற காரணங்களால் உங்கள் தொழிலில் எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம்.


உங்களால் சரியான நேரத்தில் ப்ரோஜெக்ட்டை முடிக்க முடியாமல் போகலாம். இதனால் உங்கள் செல்வாக்கும் பாதிக்கப்படலாம். உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை நிர்வாக செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும்.



Prev Topic

Next Topic