![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கல்வி |
கல்வி
கடந்த ஒரு ஆண்டு காலம் மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டிருந்திருப்பார்கள். புது பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கை கிடைத்ததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், தற்போது முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக நிலை கொள்வதால், அதிக தடைகளை சந்திக்க நேரிடலாம், உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். அதனால் உங்களால் விளையாட்டிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்படக் கூடும். நீங்கள் Ph.D போன்ற முதுநிலை பட்டும் படித்துக் கொண்டிருந்தாள், பல்கலைகழகத்தில் உள்ள பேராசிரியருடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ஆய்வறிக்கையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமலும், அதற்கு ஒப்புதல் பெறமுடியாமலும் போகலாம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் சரியான தங்கும் வசதி கிடைக்காமல் அவதிப்படக் கூடும். படிப்பில் நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic