![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குரு, சனி பகவான் மற்றும் கேது இணைந்து சாதகமான இடத்தில் சஞ்சரித்ததால், நீங்கள் சிறப்பான நேரத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை புரிந்து கொள்ள, அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். இந்த குரு பெயர்ச்சியின் தொடக்கத்தில் எந்த பெரிய பிரச்சனையும் இருக்காது. எனினும், வரும் ஜனவரி 23, 2020 அன்று ஏற்படும் சனி பெயர்ச்சி மற்றும் செப்டம்பர் 23, 2020 அன்று ஏற்படும் ராகு/கேது பெயர்ச்சி சிறப்பாக இல்லை. அதனால், செப்டம்பர் முதல் நவம்பர் 2020 வரை அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
பெப்ரவரி 2020 முதல் அர்தஷ்டம சனி காலம் நடக்க உள்ளதால், உங்கள் உறவில் நீங்கள் அதிக சவால் நிறைந்த சூழலை சந்திக்க நேரிடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற சூழல் ஏற்படுவதால், சில பிரச்சணைகள் உண்டாகக் கூடும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் அரசியல் உண்டாகும். அதனால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். வரும் நாட்களில் நீங்கள் சுப காரியங்கள் நடத்த எண்ணினால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருக்க வேண்டும்.
பயணம் குறித்த காரணங்களால், திருமணம் ஆன தம்பதியினர் சில மாதங்கள் தற்காலிகமாக பிரிந்து இருக்க நேரிடலாம். பெப்ரவரி 2020 முதல் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், குழந்தை பேருக்கு திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பெண்ணாக இருந்து, கருவுற்றிருந்தாள், உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை குரு 4ஆம் வீட்டிற்கு அதி சரமாய் பெயருவதால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic