குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

நிதி / பணம்


கடந்த சில ஆண்டுகள் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்திருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், குரு 2ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்திருப்பார்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்கள், பங்கு சந்தை மற்றும் பிற முதலீடுகளில் நல்ல லாபத்தை கண்டிருப்பீர்கள். ஆனால் தற்போது குரு உங்கள் ராசியின் 3ஆம் வீற்றிகு பெயருவதால், இத்தகைய பலனை எதிர் பார்க்க முடியாது. உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் செலவுகளால் வெகுவாக குறையும்.
சனி பகவான் அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பயணம், மருத்துவம் மற்றும் குடும்பத் தேவைகள் போன்ற காரணங்களால் உங்கள் செலவுகளை அதிகரிக்கக் கூடும். யாரிடமும் பணம் கடன் வாங்கவோ அல்லது யாருக்கும் பணம் கடன் கொடுக்கவோ கூடாது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், புது கடன்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் வங்கிக் கடன் அதிக வட்டி விகிதத்தில் ஒப்புதல் பெரும். உங்கள வீட்டிற்கு அதிக விருந்தினர்கள் வரத்து இருக்கும். இதனால் அவர்களை கவனிப்பதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம்.


அதிகரிக்கும் கடன்களால், உங்கள் கிரெடிட் மதிப்பு குறையும். இதனால் வட்டி விகிதம் அதிகரித்து, உங்கள் நிலை மேலும் மோசமாகக் கூடும். உங்கள வங்கிக் கடன் ஆகஸ்ட் 2020க்கு மேல் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் கவனமாக இல்லையென்றால், உங்கள் அசையா சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உண்டாகலாம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழிலில் இருக்கும் பங்குதாரர்களால் பண விடயத்தில் நீங்கள் ஏமாற்றப் படலாம். பெருமாளை வணங்கி, சுதர்சன மகா மந்திரம் கேட்டு வந்தால், உங்களுக்கு நிதி குறித்த விடயங்களில் பாதுகாப்பு கிடைக்கும்.


Prev Topic

Next Topic