![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 சோதனை காலம் (35 / 100)
உங்கள் மனைவி/கணவன் மற்றும் பெற்றோர்களின் உடல் நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம். நீங்கள் சக்தி குறைந்து காணப்படுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனைவி/கணவன், அவரது வீட்டார்கள் மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் அதிகரிக்கும் சண்டைகளால், உங்கள் மன நிம்மதி குறையும். இந்த பாகத்தில் சுப காரியங்கள் நடத்த முயற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்காது/ காதலர்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படக் கூடும்.
அலுவலகத்தில் உண்டாகும் கடுமையான அரசியலால் உங்கள் உத்தியோகம் அதிகம் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் யாருடனாவது நீங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அது உங்கள் செல்வாக்கை பாதிக்கக் கூடும். உங்களுக்கு நியாமான பதவி உயர்வோ, சம்பள உயர்வோ அல்லது சன்மானமோ தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து கிடைக்காமல் போகலாம். இது தொழிலதிபர்களுக்கு சோதனை காலமாக இருக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் எந்த பலனும் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
உங்கள் நிதி நிலை மிகவும் குறைவான அளவு இருக்கும். உங்களுக்கு புதிதாக கடன்கள் ஏற்படலாம்,. இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். இந்த பாகத்தில் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப் படலாம். ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரிய அளவு நட்டத்தையும், நிதி இழப்பையும் உண்டாக்கக் கூடும்.
Prev Topic
Next Topic