குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

உடல் நலம்


குரு மற்றும் சனி பகவானின் பலத்தால், உங்கள் உடல் நலம் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் சமீப காலத்தில் அழகு குறித்த அறுவை சிகிச்சை செய்திருந்தால், அது குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் உடல் நலம் பாதிக்கப்படாது. எனினும், சனி பகவான் அர்தாஷ்டம ஸ்தானத்திற்கு பெயருவதால், நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், ஆகஸ்ட் 2020 வரை கேது உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். இதனால் உங்களுக்கு சில நல்ல பலன்கள் கிடைக்கும். எனினும் செப்டம்பர் 2020க்கு மேல் அர்தஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக உணரப்படும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஜீரணம், வயிறு அல்லது கல்லீரல் போன்ற உறுப்புகளில் பிரச்சனை ஏற்படக் கூடும். உங்களுக்கு சனி / புதன் அந்தர தசை நடைபெற்றுக் கொண்டிருந்தாள், சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.


செப்டம்பர் 2020க்கு மேல், நீங்கள் தவறான நண்பர்கள் வட்டாரத்தில் சிக்கக் கூடும். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால், நீங்கள் தீய பழக்கங்களுக்கும் அடிமையாகும் சூழல் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது நல்லது. நீங்கள உங்கள் வீட்டை விட்டு தொலைதூர பயணம் செய்ய நேர்ந்தால், அதிக தனிமையை உணருவீர்கள். ஹனுமன் சலிச கேட்பதால், உடல் நல பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறையும்.



Prev Topic

Next Topic