![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | காதல் |
காதல்
கடந்த ஒரு ஆண்டு காலமாக முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரித்ததால், காதல் விடயங்களில் உங்களுக்கு பொற்காலமாக இருந்திருக்கும். நீங்கள் விரும்பியபடியே உங்கள் காதல் திருமணம் நடந்திருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து கணவன் மனைவிக்கிடையே சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்த உடன், கணவன் மனைவி உறவில் அன்யுனியம் குறைந்து காணப்படும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், அடுத்த ஒரு ஆண்டு எந்த திருமண முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் உங்கள் காதல் விருப்பத்தை தற்போது கூறாமல் இருப்பது நல்லது. நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், அவருடன் உங்களுக்கு சிறு கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற வாக்குவாதங்களும் ஏற்படக் கூடும். இந்த பிரச்சனைகள் குறிப்பாக, உங்கள் உத்தியோகத்தில் இடம்மாற்றம், வெளிநாட்டு பயணம் அல்லது விரைவாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணங்களால் ஏற்படக் கூடும்.
புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் உறவில் அன்யுனியம் குறைந்து காணப்படுவதால், சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரை நீங்கள் சில மன கசப்புகள் உண்டாவதால், தற்காலிகமாக பிரியக் கூடும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், குழந்தை பேரு பெற திட்டமிடுவதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic