![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்
கடந்த சில ஆண்டுகள் நீங்கள் நல்ல வெற்றியையும், புகழையும், வருமானத்தையும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் ஒரு முக்கியத்துவராக ஆகியிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் அதிக உற்சாகத்தோடு இருந்திருப்பீர்கள். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்பட்டிருப்பார்கள். தற்போது குரு தனுசு ராசியில் சஞ்சரித்து உங்கள உத்தியோக வளர்ச்சியில் சில பின்னடைவுகளை உண்டாக்கக் கூடும். சனி பகவான் ஜனவரி 23, 2020 அன்று பெயர்ச்சி அடைவதால், அதற்கு முன் உங்கள் திரைப்படத்தை வெளியிடுவது நல்லது.
பெப்ரவரி 2020 முதல் உங்களுக்கு அர்தஷ்டம சனி தொடங்கியதும், பிரச்சனைகள் அதிகரிக்கக் கூடும். உங்களது அதி வேக வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை பட்டிருப்பார்கள். மேலும் அதிக மறைமுக எதிரிகள் தோன்றி இருப்பார்கள். உங்கள் எதிரிகள் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள். புதிதாக திரைப்படத்தில் பணி புரிய ஒப்பந்தம் போட விரும்பினாலோ அல்லது ரிஸ்க் எடுக்க எண்ணினாலோ அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இணையதளங்களில் உங்களுக்கு எதிரான வதந்திகள் பரவுவதால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படலாம். யாரிடமும் கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தாமல் இருப்பது நல்லது. அது உங்கள் செல்வாக்கையும், நற்பெயரையும் பாதிக்கக் கூடும். ஜனவரி 2020 முதல் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு முன் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic