குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் கேதுவோடு 3ஆம் வீட்டிலும் இணைந்து சஞ்சரித்து கடந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தந்திருப்பார். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவது நல்ல செய்தி அல்ல. எனினும். சனி பகவான் மற்றும் கேது இணைந்து தொடருந்து உங்கள் வளர்ச்சிக்கு அடுத்த சில மாதங்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சனி பகவான் உங்கள் ராசியின் 4 வீட்டிற்கு 23, 2020 அன்று பெயருகிறார். இது அர்தஷ்டம சனியாகும். குரு மற்றும் சனி பகவான் ஜனவரி 2020 இறுதி பகுதியில் இருந்து உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதனால் பல விடயங்களில் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் மோசமாக பாதிக்கப்படலாம். உங்களுக்கு அலுவலகத்தில் மன அழுத்தமும், பதற்றமும் ஏற்படலாம். தொழிலதிபர்கள், தொழிலில் தொடர்ந்து இருக்க உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் தேவை.


உங்கள் சொந்த வாழ்க்கைக்கு நீங்கள் அதிக கவனம் தர வேண்டும். செப்டம்பர் 2020 வாக்கில் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் உண்டாகக் கூடும்/ அடுத்த ஒரு வருடத்திற்கு முக்கிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், நீங்கள் சக்திகளை இழக்கக் கூடும். எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. முதலீடுகள் மற்றும் ஊக வர்த்தகம் போன்றவற்றில் ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல. இதனால் உங்களுக்கு ஆகஸ்ட் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் பெரிய நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic