![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை நல்ல நேரம் (70 / 100)
குரு மகர ராசிக்கு அதி சரமாய் மார்ச் 29, 2020 அன்று பெயருகிறார். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். குறிப்பாக உங்கள் நிதி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தடைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைவீர்கள்.
குடும்பத்தில் அரசியல் குறையும். சுப காரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். காதலர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்கள் உத்தியோகத்தில் இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டாகும். உங்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்கும். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உத்தியோகத்தில் இருக்கும் வேலை சுமைகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனோடு தொடர்ந்து வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
உங்களுக்கு தற்போது அர்தஷ்டம சனி காலம் நடைபெறுவதால், உங்கள் குழந்தைகள் அல்லது மனைவி/கணவன் பெயரை தொழிலில் சேர்த்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால், உங்கள் லாபத்தை பணமாக்கிக் கொண்டு, தொழிலை விட்டு வெளியேறுவது நல்லது.
வீட்டு பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக செலவுகள் அதிகமாகக் கூடும். செலவுகள் செய்யும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அது உங்கள் சேமிப்பை விரைவாக கரைத்து விடக் கூடும். யாரிடமும் இந்த பாகத்தில் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. பங்கு சந்தை பரிவர்த்தனைகள் செய்வதில் லாபம் பெற வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic