![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை கலவையான பலன்கள் (50 / 100)
குரு இந்த பாகத்தில் வக்கிர கதி அடைகிறார். கேது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருவது சிறப்பாக இல்லை. நீங்கள் எது செய்தாலும் அதில் தேக்க நிலை உண்டாகலாம். நீங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நல்ல மாற்றங்களை சந்தித்தாலும், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. விடயங்கள் செப்டம்பர் 2020க்கு மேல் உங்கள் கட்டுபாட்டை விட்டு போகக் கூடும்.
குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால், உங்கள் மன வருத்தம் அதிகரிக்கக் கூடும். உங்கள் உடல் நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம். வயிறு, சுவாச அமைப்பு, கல்லீரில் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். ஏதாவது உடல் நல கோளாறு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது முக்கியம். அலுவலகத்தில் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம், அலுவலகத்தில் உங்களுக்கு அதிகரிக்கும் அரசியலால், உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம். உங்களுக்கு உதவியாக இருந்த மேலாளர் நிறுவனத்தை விட்டு விலகி விடக் கூடும். தொழிலதிபர்கள் அதிக சவால்களை இந்த பாகத்தில் சந்திக்க நேரிடும்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் பெறக் கூடும். உங்கள் நிதி நிலை பெரும் அளவு பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன், எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் நிராகரிக்கப் படலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுத்திருந்தால், அந்த கடனுக்கு தற்போது நீங்கள் பொறுப்பாக வேண்டிய சூழல் உண்டாகலாம். பங்கு சந்தை முதலீடுகள் தற்போது பெரிய நட்டத்தை உண்டாக்கலாம்.
Prev Topic
Next Topic