![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கி இருந்திருப்பார்கள். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை நீங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு லாபத்தை கண்டிருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் தற்போது முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் இந்த அதிர்ஷ்டத்தை தொடர்ந்து எதிர் பார்க்க முடியாது. டிசம்பர் 2019 முதல் உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படத் தொடங்கும். நீங்கள் எவ்வளவு நுணுக்கமாக பங்கு சந்தை முதலீடுகளை திட்டமிட்டாலும், அது இறுதி நேரத்தில் தவறாகப் போகலாம். இதனால் நீங்கள் அதிக இழப்பை சந்திக்க நேரிடும்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பங்கு சந்தை முதலீட்டை விட்டு முற்றிலும் விலகி இருக்க வேண்டும். நீங்கள் நீண்ட கால முதலீடு செய்திருந்தால், ரிஸ்க் அதிகமாக இருக்கும் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பத்திரம், சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை செய்யலாம். முடிந்த வரை ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. முக்கிய கிரகங்கள் இணைந்து உங்களுக்கு சாதகமற்ற பலனை தருவதால், பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளையும், நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும்.
பெப்ரவரி 2020 முதல் நவம்பர் 2020 வரை ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. நீங்கள் உங்கள் வீடு அல்லது வேறு விதமான சொத்துக்களை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடி இருப்பவர்களால் அல்லது ஊடுருவ நினைப்பவர்களால் பிரச்சனை ஏற்படலாம். நீங்கள் கட்டிடம் கட்ட எண்ணினால், அதற்கு அனுமதி வாங்குவது மிக கடினமாக ஒன்றாக ஆகி விடும். நீங்கள் கட்டிடம் கட்ட அணுகும் கட்டுமான நிபுணர், உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, போலி ஒப்பந்தம் செய்து உங்களை ஏமாற்றி விட்டு ஓடி விடக் கூடும். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் செயல்படுவது நல்லது.
Prev Topic
Next Topic