![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
கடந்த சமீப நாட்களில் நீங்கள் பயணம் குறித்த விடயங்களில் நல்ல அதிர்ஷ்டத்தை கண்டிருப்பீர்கள். தொழில் குறித்த விடயங்களில் பெரிய அளவு வெற்றியையும் பயணத்தால் கண்டிருப்பீர்கள். மேலும் விமான பயணம் போன்ற வெளி நாட்டு பயணங்களும், சுற்றுலா செல்ல செய்திருப்பீர்கள். நவம்பர் 4, 2019 முதல் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், தொலை தூர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக தற்போது இருக்காது.
சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து பிரச்சனைகளை உண்டாக்குவார். மேலும் பயணத்தால் உங்களுக்கு பண இழப்பும் ஏற்படலாம். உங்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்திற்கு தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால், அதிக பணம் செலவாகும். உங்கள் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால், அதற்கு போதுமான காப்பீடு எடுத்துக் கொள்ளவது நல்லது. உங்கள் தங்க நகைகளை வங்கி பெட்டகத்தில் வைத்துக் கொள்வது நல்ல யோசனையாக இருக்கும்.
குடியேற்றம் குறித்த பலன்களை எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. ஜனவரி 2020 முதல் உங்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் வரக் கூடும். வெளிநாட்டிற்கு குடி பெயர இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் உங்கள் வேலை நீட்டிர்புக்காக பெட்டிசன் வின்னபித்திருந்தால், அது தாமதமாகக் கூடும், அல்லது ரத்தாகக் கூடும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெறுவதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் பலமாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic