![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
ஆகஸ்ட் 2019 முதல் சமீப நாட்களில் நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றிருப்பீர்கள். எனினும், உங்கள் வளர்ச்சியில் சில பின்னடைவுகள் ஏற்பட உள்ளதால், அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு உண்டாகிய சில சிக்கல்களை எப்படி கையாளுவது என்று தெரியாமல் நீங்கள் அவதிப் படக் கூடும். நீங்கள் நேர்மையாகவும், நேரடியாகவும் உங்கள் போட்டியாளர்களை எதிர் கொள்ள நினைத்தால், அது எண்ணியபடி நடக்காமல் போகலாம். இதனால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரொஜெக்டை இழக்க நேரிடலாம். மேலும் இதனால் பண இழப்பும் உண்டாகலாம்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெப்ரவரி 2020 வாக்கில் பெயர்ந்து நல்ல பலன்களை உங்களுக்குத் தருவார். சனி பகவான் நீங்கள் தொழிலில் தொடர்ந்து இருக்க உதவுவார். எனினும், உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இல்லையென்றால், பண இழப்பு உண்டாகக் கூடும். வங்கிக் கடன் கிடைப்பதில் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். அதிக பணம் முதலீடு செய்து உங்கள் தொழிலை விரிவு படுத்த திட்டமிடுவது தற்போது நல்ல யோசனையாக இருக்காது. எனினும், உங்கள் நேரத்தை புது பொருட்கள் அல்லது சேவையை உருவாக்குவதிலும், புது யோசனைகளை செயல் படுத்துவதிலும் செலவு செய்யலாம்.
சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான குறுகிய காலத்தில் எதிர் பாராத பண வரத்து அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு, நீண்ட கால அடிப்படையில் உங்கள் நேரம் சிறப்பாக இருப்பதால், உங்கள் தொழிலில் சிறப்பான பலனைப் பெற நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து பின் செயல்பட வேண்டும். 2020ல் உங்கள் தொழிலில் ஏற்படும் பின்னடைவுகள், களைந்து போகும் மேகங்களாக மறைந்து விடும்.
Prev Topic
Next Topic