குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


உங்கள் சொந்த வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகி இருந்திருக்கும். உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தாலோ, திருமணம் நடந்திருந்தாலோ, குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது புது வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தாலோ, அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து சில பின்னடைவுகளை உண்டாக்கி, உங்கள் உறவுகளுடன் பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திருப்பார். குருவின் தாக்கம் ஜனவரி 23, 2020 வரை மட்டுமே இருக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின், அவரின் பலத்தால் பெப்ரவரி 2020 முதல் விடயங்கள் நல்ல நிலைக்கு மாறும், பெப்ரவரி 2020 முதல் உங்கள் மனைவி/கணவன், அவரது வீட்டார்கள், மற்றும் குழந்தைகளுடனான உறவு நல்ல நிலையில் இருக்கும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.


குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் உறவு குறித்த விடயங்களில் நீங்கள் எந்த பயமும் கொள்ள வேண்டாம். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் சக்தியையும், அதிர்ஷ்டத்தையும் மேலும் அதிகரிப்பார். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வெளிநாட்டிற்கு ஒரு குறுகிய கால பயணம் செய்வதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic