குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

நவம்பர் 04, 2019 மமுதல் மார்ச் 29, 2020 வரை கலவையான பலன்கள் (55 / 100)


மூன்று முக்கிய கிரகங்களான, சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து நவம்பர் 4, 2019 முதல் ஜனவரி 23, 2019 வரை சஞ்சரித்து உங்களுக்கு மோசமான பலன்களை தரக் கூடும். எனினும் சனி பகவான் உங்கள் லாப சாதனத்திற்கு ஜனவரி 23, 2019 முதல் மார்ச் 29, 2019 வரை சஞ்சரிபதால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டைக்கும்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயர்ந்தவுடன், எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய செய்திகள் வரும். உங்கள் மனைவி /கணவன் மற்றும் குழந்தைகளுடன் ஏற்படும் எதிர் பாராத வாக்குவாதங்களால் உங்கள் மன நிம்மதி குறையும். காதலர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாவதால், கடுமையான நேரத்தை சந்திக்க நேரிடும். உங்கள் உத்தியோகம் பெரிதும் பாதிக்கப்படலாம். எனினும், இந்த பிரச்சனைகள் அனைத்தும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. நீங்கள் சில வாரங்கள் காத்திருந்தால், விடயங்கள் அனைத்தும் அமைதியாகி உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.


பெப்ரவரி 2020 முதல் நீங்கள் நீண்ட கால திட்டங்கள் செய்வதற்கான முயற்சிகளையும், முடிவுகளையும் எடுக்கலாம். உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைத்து அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அந்த நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளமும், நிதி வளர்ச்சியும் இருகின்றதா எனபதை பார்ப்பதை விட, ஒரு நிரந்தரமான நிறுவனமாக அது உங்களுக்கு இருக்குமா என்று பார்ப்பது நல்லது. நீங்கள் தொழில் செய்து கொண்டிருந்தாள், பெப்ரவரி 2020க்கு மேல் நல்ல வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். உங்கள் நிதி நிலை பெப்ரவரி 2020க்கு மேல் நல்ல முன்னேற்றம் பெரும். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய எண்ணினால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே லாபம் தரக்கூடியதாக இருக்கும்.



Prev Topic

Next Topic