குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்


திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலம் நல்ல முன்னேற்றத்தை கண்டிருப்பார்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் வளர்ச்சியில் சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு எதிரான அரசியல் மற்றும் சதியால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழக்கக் கூடும். எனினும், சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின், உங்களுக்கு பெரிய ப்ரோஜெக்ட்டுகளில் பணி புரிய பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் பல ஆண்டு கால ப்ரோஜெக்ட்டில் ஒப்பந்தம் செய்தாலும், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும், உங்கள் செல்வாக்கும், நற்பெயரும் பாதிக்கப்படாது. உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு நிதி நிலையில் ஏற்பட்ட அழுத்தம் நிறைந்த சூழலை நீங்கள் சமாளிக்க வேண்டும். மேலும் உங்கள் மறைமுக எதிர்களை எதிர்த்து நீங்கள் நிற்க வேண்டும். பெப்ரவரி 2020க்கு மேல் மேல் சனி பகவான் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல பலன்களைத் தருவார். எனினும், நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.




Prev Topic

Next Topic