குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


கடந்த ஒரு வருடம் குரு உங்கள் ராசியின் 9ஆம் இடமான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்ததால், நல்ல பலன்களை பெற்றிருப்பீர்கள். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை சிறப்பான முன்னேற்றத்தை பெற்றிருப்பீர்கள். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் இடத்தில் சஞ்சரித்து சில பின்னடைவுகளை ஏற்படுத்தி இருப்பார்கள். ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து, சொத்து குறித்த விடயங்களில் பிரச்சனைகளையும், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் தடைகளையும் உண்டாக்கி இருந்திருப்பார். எனினும், அனைத்து பிரச்சனைகளையும் சுமூகமாக முடிக்க குரு உங்களுக்கு உதவி செய்திருப்பார்.
குரு தற்போது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருவது சிறப்பாக இல்லை. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த பெயர்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு குருவின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பெப்ரவரி 2020 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார். மேலும் குரு சனி பகவானோடு 11ஆம் வீட்டில் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியைத் தருவார். செப்டம்பர் 2020ல் நடக்கும் ராகு பெயர்ச்சியும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.


மொத்தத்தில் நீங்கள் நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பெப்ரவரி 2020கு மேல், உங்களுக்கு சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிபப்தால் நல்ல உதவியை புரிவார். சனி பகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மகர ராசியில் சஞ்சரிப்பார். நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல நேரம் இருக்கும். நீங்கள் நீண்ட கால குறிக்கோள்களை முன் வைத்து, வரும் ஆண்டுகளில் அதற்கான முயற்சிகளை செய்யலாம். குறுகிய காலத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.. குறிப்பாக ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை உங்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.


Prev Topic

Next Topic