குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை சிறப்பான நேரம் (90 / 100)


இது உங்களுக்கு ஒரு சிறப்பான நேரமாக இருக்கும். சனி பகவான் மற்றும் குரு இணைந்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குகின்றார்கள். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு அமைப்பாகும். இந்த பாகத்தில் உங்கள் வளர்ச்சியும், வெற்றியும் அதிகமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் மனைவி/கணவனுடன் இருக்கும் உறவில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்படும். புது உறவை உண்டாக்கிக் கொள்ள இது நல்ல நேரம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த பாகத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கம். திருமணம் ஆன தம்பதியினர்கள் குழந்தை பேரு பெறுவார்கள். தற்போது இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், நீங்கள் புது வாய்ப்புகளைத் தேடலாம். உங்களுக்கு எளிதாக எந்த அதிக முயற்சியும் இல்லாமல், அடுத்த நிலைக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வேலை சுமை மற்றும் சொந்த வாழ்க்கையை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் எதிர் காலத்திற்கு நீங்கள் பணம் சேர்த்து வைக்கத் தொடங்குவீர்கள். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். சுய தொழில் புரிவோர்கள் நல்ல செல்வாக்கும், நிதி சன்மானங்களையும் பெறுவார்கள்.
இந்த பாகத்தில் பயணம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உன்காடி விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எளிதாக கிடைத்து விடும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு விண்ணைத் தொடும் அளவிற்கு லாபத்தை கொடுக்கும். ஆனால் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.




Prev Topic

Next Topic