குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை மிதமான பின்னடைவுகள் (60 / 100)


கடந்த சமீப காலத்தில், அதாவது கடந்த பாகத்தில் உங்களுக்கு உண்டான அதிர்ஷ்டம் சற்று குறையும். உங்கள் உடல் நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். எனினும் ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு தேவையற்ற பயமும், பதற்றமும் உண்டாகும். இதனால் உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு சற்று பாதிக்கப்படும். இந்த பாகத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே. சனி பகவான் சிறப்பான இடத்தில் சஞ்சரிபதால், நீங்கள் சுப காரியங்களை நிகழ்த்தலாம். எனினும், குரு மற்றும் கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கக் கூடும்.
அலுவலகத்தில் வேலை சுமை சுமாராக இருக்கும். நீங்கள் மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், உங்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து, தேவையற்ற அரசியல் உண்டாவதால், அதிக தடைகள் ஏற்படலாம். நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்கலாம், ஆனால் எதிர் பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம். உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். பங்கு சந்தை முதலீடுகள் செய்வதில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனென்றால், நீங்கள் அதிகம் பணம் இழக்கும் சூழல் உண்டாகலாம். முடிந்த வரை யாரிடமும் கடன் வாங்கவோ அல்லது யாருக்கும் கடன் கொடுப்பதோ வேண்டாம்.


நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் போன்ற குறிகிய கால முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெறுவதில் உங்களுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். அநேகமாக, எந்த முன்னேற்றமும் இல்லாமல் உங்கள் விண்ணப்பம் தேக்கம் அடையும் சூழல் உண்டாகலாம். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் குடியேற்ற பலன்கள் சற்று தாமதமானாலும், அது ஒப்புதல் பெற்று விடும்.


Prev Topic

Next Topic