![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
குரு பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலம் சந்தரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தந்ததால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தற்போது நீண்ட கால பயணம் செய்வதில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு பயணத்தின் போது பிரச்சணைகள் உண்டாகக் கூடும். பயண சீட்டு முன் பதிவு, தங்கும் விடுதி முன் பதிவு போன்ற விடயங்களில் நல்ல சலுகைகள் கிடைக்காமல் போகலாம். மேலும் உங்கள் செலவுகளும் அதிகரிக்கக் கூடும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதனால், உங்கள் செலவுகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள்.
உங்கள் குடியேற்றம் குறித்த விடயங்களில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். உங்களது நிரந்தர குடியேற்றம் குறித்த விண்ணப்பம் ஒப்புதல் பெரும். எனினும். சுற்றுலா மற்றும் தொழில் குறித்த பயணம் உங்களுக்கு தாமதமாகலாம். ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தை பயன் படுத்தி நீங்கள் H1B விசா விரிவாக்கம் மற்றும் விசா ஸ்டாம்பின் செய்ய முயற்சி செய்யலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால், நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து, அதன்படி செயல் பட வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic