குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

தொழில் அதிபர்கள்


சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து அதிக பிரச்சனைகளை கடந்த 2.5 ஆண்டுகளாக தந்திருப்பார். உங்கள் மறைமுக எதிரிகளால் நீங்கள் உங்களுக்கு எதிரான அரசியல், சதி மற்றும் பிரச்சனைகளை அதிகமாக சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது குரு, சனி பகவான் மற்றும் கேதுவுடன் இணைந்து சஞ்சரிபப்தால், நவம்பர் அல்லது டிசம்பர் 2019 வாக்கில் அதிக தடைகளையும், பிரச்சனைகளையும் ஒரே இரவில் உங்களுக்கு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தொழில் குறித்த விடயங்கள் உங்களுக்கு மோசமாகக் கூடும். உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம். மேலும் சட்டம் குறித்த பிரச்சனைகளை நீங்கள் நவம்பர் 2020 வரை தொடர்ந்து சந்திக்க நேரிடலாம்.
உங்கள் தொழில் சார்ந்த சொத்துக்களை நீங்கள் கடன் சுமையை சமாளிக்க விற்க நேரிடலாம். உங்கள் வங்கிக் கடன் ரத்தாகலாம். உங்கள் போட்டியாளர்கள், உங்களது இந்த பலவீனமான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, உங்கள் நிறுவனத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள். இந்த ஒரு ஆண்டு காலத்தை நீங்கள் கடக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் வங்கி கணக்கு திவாலாகி, உங்கள் நிலை மேலும் மோசமாகக் கூடும்.


மன உளைச்சால் அதிக அளவில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடவுள் வழிப்பாட்டின் அருமை, சோதிடத்தின் அருமை மற்றும் பிரபஞ்ச சக்திகளின் அருமையை உணருவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் முயற்சியோ அல்லது மேலும் முதலீடு செய்வதோ கூடாது. மாறாக நல்ல சாதக நிலை அல்லது சாதகமான மகா தசை அல்லது கோச்சார கிரக உதவி இருக்கும் குடும்பத்தினர்கள் பெயரை உங்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் பெயரில் சில பங்குகளை மாற்றி விடுவதால், உங்கள் தொழிலை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் பிரச்சனையை ஓரளவிற்கு குறைக்க உதவும்.



Prev Topic

Next Topic