குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


முக்கிய கிரகங்கள் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிபப்தால், உங்கள் குடும்பத்தில் பல சவால்கள் நிறைந்த சூழல் உண்டாகும். நவம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை பிரச்சனைகள் அதிகமாகக் கூடும். விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறுவதால், மன நிம்மதியை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்கள் மனைவி/கணவன், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உங்கள் பெற்றோர்களுடன் தேவையற்ற சண்டை, வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடுகள் ஏற்படக் கூடும்.
உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். மேலும் அவர்கள் அதிக தேவைகளை முன் வைப்பார்கள். உங்கள் குடும்பதினர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ள, நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். திருமணம் நிச்சயிக்க அல்லது சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம் இல்லை.


உங்கள் குடும்பத்தினர்களுடன் விவாகரத்து, குழந்தை காவல், அல்லது சொத்து குறித்து ஏதாவது சட்ட பிரச்சனைகள் இருந்தால், அவை உங்களுக்கு எதிராக செல்லக் கூடும். வழக்குகளில் நீங்கள் எதிர் பார்த்த தீர்ப்பு வராததால், நீங்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். மேலும் பண இழப்பும் உங்களுக்கு உண்டாகும். நவம்பர் 2020 வரை உங்களுக்கு இருக்கும் சோதனை காலத்தை கடக்கவும், உங்களுக்கு உண்டாகும் சவால்களை சமாளிக்கவும் நீங்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்தாலும், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே.



Prev Topic

Next Topic