குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

நிதி / பணம்


சனி பகவான், ராகு மற்றும் கேது உங்களுக்கு நிதி பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திர்ப்பார்கள். தற்போது குரு தனுசு ராசிக்கு பெயருவதால், மேலும் சூழல் மோசமாகக் கூடும். வேலை இழப்பு, எதிர் பாராத செலவுகள், கடனுக்கு அதிக வட்டி விகிதம் போன்ற காரணங்களால் உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். மேலும் பண விடயங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை ஏமாற்றக் கூடும். நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மற்றும் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை யாருக்கும் வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது.
விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலைக்கு சென்றிருப்பீர்கள். உங்கள் புது வங்கி கடன் அல்லது நிதி மறுபரிசீலனை செய்யும் விண்ணப்பம் சரியான காரணம் இல்லாமல் நிராகரிக்கப்படலாம். நீங்கள் வீடு வாங்க முயற்சி செய்தால், அது சார்ந்த கட்டுமான நிறுவனம் அதன் கட்டுமானத்தை முடிக்காமல் அதிக தாமதம் செய்து கொண்டிருக்கும். இதனால், உங்களால் புது வீட்டிற்கு குடி பெயர முடியாமல் இருக்கும். நல்ல விலைக்கு உங்கள் சொத்துக்களை விற்க முடியாமல் இருக்கும். உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்க இது சரியான நேரம் இல்லை.


திருட்டு போன்ற காரணங்களால், நீங்கள் உங்கள் விலை உயர்ந்த பொருட்கள், அதாவது, தங்கம், விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை இழக்க நேரிடலாம். உங்கள் சொத்துக்களுக்கும், விலை உயர்ந்த பொருட்களுக்கும் போதுமான காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது யாரிடமும் கடன் வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. குரு மகர ராசிக்கு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை பெயரும் போது தற்காலிகமாக சில நிவாரணம் கிடைக்கும்.



Prev Topic

Next Topic