குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

செப்டம்பர் 13, 2020 நவம்பர் 20, 2020 சோதனைகள் தொடரும் (25 / 100)


இந்த பாகத்தில் ஜென்ம குருவின் தாக்கம் அதிகமாக உணரப்படும். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயர்ந்து, உங்கள் நண்பர்கள் மூலம் சில உதவிகள் செய்வார். எனினும் சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், குரு 1ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களைத் தரக் கூடும். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். அதிக தூக்கம் இல்லாத இரவுகளை நீங்கள் கடக்க நேரிடும். உங்கள் மனதில் அதிக வருத்தமும், மன அழுத்தமும் இருக்கும்.
குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் இருக்கும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், உங்கள் குடும்பத்தை விட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரிய நேரிடலாம். காதலர்கள் வலி மிகுந்த சூழலை சந்திக்க நேரிடும். இன்னும் மோசமான சூழலில், உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தால், அது ரத்தாகவும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம், பதற்றம் மற்றும் தேவையற்ற பயம் உண்டாகும். உங்கள் குழந்தைகள் நல்ல செய்திகளை உங்களுக்கு கொண்டு வர மாட்டார்கள்.


செவ்வாய் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைகின்றார். உங்கள் உத்தியோகம் இதனால் பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் நீங்கள் மன நிம்மதியை இழந்து, அதனால் தூக்கம் இல்லாத இரவுகளை கழிக்க நேரிடும். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். இல்லையென்றால், அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படும் அவமானத்தாலும், அதிகரிக்கும் அரசியலாலும், நீங்கள் ராஜினாமா செய்து விடக் கூடும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வோ, சம்பள உயர்வோ எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தொழிலதிபர்களுக்கு இது சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி இருந்தால், இந்த காலகட்டத்தில் அதனை திருப்பித் தார முடியாமல் போவதால், அவமானப்படும் சூழல் உண்டாகலாம். மலைப் போல் அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு சிஎதிருந்தால், ஒரே இரவில் உங்கள் பணத்தில் இழக்க நேரிடும். எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது மட்டுமே தற்போது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. யாருக்கும் பணம் கடன் கொடுப்பதோ, அல்லது யாரிடமும் பணம் கடன் வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic