![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல் நலம் |
உடல் நலம்
கேது மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள், அதிக பதற்றம், வயிற்றில் பிரச்சனை என்று பல உடல் உபாதைகளை தந்திருக்கக் கூடும். தற்போது ஜென்ம குரு உங்கள் சக்தியை விரைவாக குறைத்து, உங்களை மேலும் பலவீனமாக்கக் கூடும். உங்களுக்கு மயக்கம் மற்றும் சோர்வு உண்டாகும். போதுமான நார் சத்து நிறைந்த உணவும், புரத சத்து நிறைந்த உணவும் எடுத்துக் கொண்டால், உடல் பலவீனத்தை போக்கலாம். போதுமான உடற்பயிற்சி செய்து, நல்ல உணவு முறையை பின் பற்றினால், ஆரோக்கியமாக இருக்கலாம்.
உங்கள் பெற்றோர்கள் மற்றும் மனைவி/கணவன் உடல் நிலை பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடும். உங்கள் சொந்த விடயங்களை யாரிடமும், அது உங்கள் நண்பராக இருந்தாலும் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கட்டுபாடின்றி நீங்கள் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடும்.
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், அதிக தனிமையாக இருப்பது உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம். நவம்பர் 2019 முதல் பெப்ரவரி 2020 வரை தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு நல்ல ஆலோசகரை அணுகி, நிதானத்தோடும், சரியான பாதையிலும் உங்கள் வாழ்க்கையை எடுத்து செல்ல ஆலோசனை பெற்று அதன் படி நடந்து கொள்வது நல்லது. சுதர்சன மாகா மந்திரம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic