குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்ததால், நீங்கள் சுப காரியங்களை நிகழ்த்தி இருப்பீர்கள். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து சுப காரியங்கள் நிகழ்த்தும் போது அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் நிறைந்த சூழலை உங்களுக்கு தந்திருக்கக் கூடும். ஆகஸ்ட் 2019 நீங்கள் கலவையான பலன்களை மொத்தத்தில் கண்டிருப்பீர்கள். தற்போது ஜென்ம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த வேளையில், குரு உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கு பெயருகின்றார்.
செப்டம்பர் 2019 முதல் உங்களுக்கு விடயங்கள் மோசமாக இருந்திருக்கும். தற்போது, எதிர்பாரா விதமாக, அனைத்தும் உங்கள் கட்டுபாடின்றி மேலும் மோசமாகக் கூடும். உடல் நல பிரச்சனைகள், உறவுகளுடன் பிரச்சனைகள், உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் பிரச்சனைகள் என்று பல உண்டாகும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப் படலாம், சட்ட பிரச்சணைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அவமானப் படும் சூழலும் ஏற்படலாம்.


சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜனவரி 23, 2020 அன்று பெயருவதால் விடயங்கள் சற்று ஆறுதலாக இருக்கும். உங்களுக்கு ஏப்ரல் 2020 முதல் மூன்று மாதங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தை பயன் படுத்தி நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். ஏனென்றால், ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை நீங்கள் மற்றுமொரு சோதனை காலத்தை சந்திக்க நேரிடலாம்.
நீங்கள் ஜென்ம சனியை விட்டு வெளியே வந்தாலும், அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு நீங்கள் ஏழரை சனி காலத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது நிகழும் குரு பெயர்ச்சி ஏழரை சனியின் தாக்கத்தை அதிகப்படுத்தக் கூடும். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் சோதிடரை அணுகி பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் செயல்படுவது நல்லது.




Prev Topic

Next Topic