குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிவாரணம் (75 / 100)


இந்த பாக காலகட்டத்திற்கு வந்த உடன், உங்கள் வாழ்க்கையில் ஒரு ஒளி தெரிவதை பார்ப்பீர்கள். கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களை ஜீரணிக்க, மற்றும் சுவாசிக்க சற்று இடம் கிடைக்கும். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து. விடயங்களை சீராக வைக்க உதவுவார்கள். உடல் நல பிரச்சனைகள் சரியான மருந்து கிடைப்பதாலும், போதுமான ஓய்வு கிடைப்பதாலும், குறையும்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், அவர்களுடன் மீண்டும் சேர இது நல்ல நேரம். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். நீங்கள் ஜூன் 30, 2020க்குள் சுப காரியத்தை நிகழ்த்தி விட திட்டமிட வேண்டும். இல்லையென்றால், அது உங்கள் கட்டுபாடின்றி, தள்ளிப்ப்போடப் படலாம்.


அலுவலகத்தில் இருக்கும் அரசியலும், வேலை சுமையும் குறையும். உங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும் முதலாளியுடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோகம் மற்றும் அதனால் கிடைக்கும் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். எனினும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை எதிர் பார்க்க இது சரியான நேரம் இல்லை. நீங்கள் வேலையை இழந்திருந்தால், இந்த பாகத்தில் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்கள் புது ப்ராஜெக்ட் கிடைப்பதால், நல்ல ஒரு திருப்பத்தை காண்பார்கள்.
உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். வீடு கடன் மற்றும் வங்கிக் கடன் போன்றவற்றின் மாதாந்திர சுமைகளை குறைக்க, நிதி மறு பரிசீலனை செய்ய இது ஏற்ற நேரம். வர்த்தகம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். எனினும்,. நீண்ட கால முதலீடு செய்தவர்கள் இந்த பாகத்தில் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.




Prev Topic

Next Topic