குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 25, 2020 வரை கலவையான பலன்கள் (50 / 100)


குரு உங்கள் ஜென்ம ராசிக்கு மீண்டும் பெயருகின்றார். மேலும் கேதுவுடன் இணைந்து இந்த பாகத்தில் சில பின்னடைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். நீங்கள் செய்யும் காரியங்கள் எந்த திசையிலும், முன்னேற்றம் இல்லாமல் தேக்கம் அடையலாம். இந்த பாகத்தில் நாட்கள் நகர நகர, அதிக பிரச்சணைகள் உண்டாவதை நீங்கள் உணரலாம். எனினும், உங்கள் பெற்றோர்கள் மற்றும் மனைவி/கணவன் உடல் நலத்தின் மீது கவனம் தேவை.
அலுவலகத்தில் வேலை சுமை சுமாராக இருக்கும். இது குறிப்பாக உங்களுக்கு பிரச்சனை தந்த மேலாளர் அல்லது உடன் வேலை பார்த்தவர், தற்காலிகமாக விடுப்பில் சென்றிருக்கலாம். அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் இந்த பாகத்தில் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் நேர்காணலுக்கு சென்றால். நீங்கள் நிராகரிக்கப் படலாம். தொழிலதிபர்கள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் ஒரு மந்தமான நிலையை காணக் கூடும். பெரிய அளவில் நட்டம் ஏற்படும் முன் உங்கள் நிறுவனத்தை விற்று விட முயற்சி செய்யலாம், அல்லது நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


நிதி நிலை சிறப்பாக இல்லை. அதிக செலவுகள் உண்டாகலாம். உங்கள் செலவுகளை சந்திக்க நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம். அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையலாம். பங்கு சந்தை முதலீடுகளை இந்த பாக காலகட்டத்தில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த பாகத்தில் உங்களுக்கு பங்கு சந்தை குறித்த விடயங்களில் எந்த அதிர்ஷ்டமும் இல்லை. உங்கள் அசைய சொத்துக்களை விற்க எண்ணினால், இந்த காலகட்டத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால், அடுத்த வருடம் வரை காத்திருந்து நல்ல விலைக்கு விற்க முயற்சி செய்யலாம்.



Prev Topic

Next Topic