குரு பெயர்ச்சி (2019 - 2020) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


நாள் வர்த்தகம், ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் ஆகஸ்ட் 2019 முதல் மோசமான பலன்களை கண்டிருப்பார்கள். எதிர்பாரா விதமாக குரு தற்போது தனுசு ராசிக்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருவதால், அதிக நிதி இழப்புகள் ஏற்படக் கூடும். உங்கள் வாழ்நாள் சேமிப்பை ஒரே இரவில் நீங்கள் இழக்க நேரிடலாம். நீங்கள் உங்கள் பணத்தை இழந்தால், அதன் பின் அந்த நட்டத்தில் இருந்து மீண்டு வர உங்களுக்கு 5 முதல் 1௦ ஆண்டு காலம் ஆகலாம். அதனால் நவம்பர் 2020 வரை பங்கு சந்தை முதலீட்டை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
உங்கள் பிறந்த சாதகம் சிறப்பாக இருந்தாலும், மகா தசை சாதகமாக இருந்தாலும், உங்களுக்கு செப்டம்பர் 2019 முதல் பெப்ரவரி 2020 வரை பண இழப்பு/நட்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் கட்டுமான துறையில் இருந்தாலோ அல்லது ரியல் எஸ்டேட் துறையில் இருந்தாலோ, அரசாங்க கொள்கை மாற்றங்கள், அல்லது, வங்கி கணக்கு திவால் ஆவது போன்ற காரணங்களால் அதிக பண இழப்பை சந்திக்க நேரிடும்.


சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் இடம் அல்லது அபார்ட்மென்ட் வாங்க முன் தொகை கொடுத்திருந்தால், அந்த கட்டுமான நிறிவனத்தின் நிர்வாகிகள் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விடலாம். மேலும் நீங்கள் உங்கள் சொத்துக்களை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடி இருப்பவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். நீங்கள் நிலம் வைத்திருந்தாள், அதில் பலர் ஊடுருவி பிரச்சனைகளை உங்களுக்கு உண்டாக்கக் கூடும். உங்கள் முதலீடுகளை பத்திரம், வங்கி சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்றவற்றில் பாதுகாப்பாக பிரித்து அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு போட்டு வைப்பது நல்லது.



Prev Topic

Next Topic