குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


கடந்த நாட்களில் பயணம் உங்களுக்கு பின்னடைவுகளையும், அதிக செலவுகளையும் உண்டாக்கி இருந்திருக்கும். ஆனால், அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கும் பெரிதாக எந்த நிவாரணமும் கிடைப்பதாக இல்லை. தொலைதூர பயணம் செய்ய நேரந்தாலும், அது அவசர தேவைக்காக ஏற்படலாம். உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு மீண்டும் கட்டாயமாக திருப்பி அனுப்பி வைக்கப் படும் சூழல் உண்டாகலாம். நீங்கள் உங்கள் வேலையை இழந்து வேறு நகரத்திற்கு, உங்கள் விருப்பம் இல்லாமல் கட்டாயத்தால் அனுப்பி வைக்கப் படலாம். அவசர மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
பயணத்தின் போது உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு சௌகரியமான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். தொழில் குறித்த பயணம் உங்களுக்கு வெற்றியைத் தராமல் போகலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தருவதால், பிரச்சனைகள் உண்டாகலாம். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் குடியேற்ற பலன்களை எதிர் பார்க்க முடியாது. நீங்கள் 221 (g) அல்லது RFE போன்ற விசா ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்றால், அது நிராகரிக்கப்படலாம்.







Prev Topic

Next Topic