குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


கடந்த ஒரு ஆண்டு காலம், சனி பகவான், மற்றும் கேது இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால், உங்கள் உத்தியோகம் குறித்த விடயங்களில் நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்திருப்பீர்கள். ராகு 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், அலுவலகத்தில் அதிகம் அரசியல் இருக்கக் கூடும். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு மேலும் அதிக பிரச்சனைகளை சுனாமிப் போலா உண்டாக்கக் கூடும்.
உங்கள் மேலாளர் உங்களை மிகக் கடுமையாக நடத்தக் கூடும். உங்களுக்கு எச் ஆர்ரிடம் இருந்து செயல் திறன் குறித்து நோட்டிஸ் வரக் கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் அரசியல் மற்றும் உங்களுக்கு எதிரான சதியால் நீங்கள் உங்கள் வேலையை விட்டு விட எண்ணுவீர்கள். நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி 2020 மாதங்களில் உங்கள் உத்தியோகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தையும் இழக்க நேரிடும். இல்லையென்றால், உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரிடலாம். அப்படி உங்கள் நிறுவனம் உங்களை உத்தியோகத்தில் இருந்து எடுக்கவில்லை என்றால், நீங்களாகவே ராஜினாமா செய்து விட எண்ணுவீர்கள். இது குறிப்பாக உங்களுக்கு அலுவலகத்தில் நேரும் அவமானத்தால், நீங்கள் அப்படி செய்ய நினைப்பீர்கள்.


அலுவலகத்திலோ அல்லது சமூக வாழ்க்கையிலோ, பெண்களிடமும், பெண்கள் குறித்த விடயத்திலும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்களுக்கு மேலாளர் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் யாரிடமும் அதிக கோபத்தோடு அல்லது கடுமையாகவோ பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அடுத்த ஓர் ஆண்டு காலத்திற்கு அது உங்கள் உத்யோகத்தை பெரும் அளவு பாதித்து விடக் கூடும். ஏப்ரல் 2020 முதல் 3 மாதங்களுக்கு உங்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும்.



Prev Topic

Next Topic