குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு உங்கள் ஜென்ம ராசியில் கடந்த ஒரு ஆண்டு காலம் சஞ்சரித்து உங்கள் சொந்த வாழ்க்கையிலும், உறவுகளுடனும் கசப்பான அனுபவங்களை தந்திருப்பார். புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் உறவில் பிரச்சனைகளை அதிகம் சந்தித்து பிரிந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அக்டோபர் 3௦, 2019 வரை நீங்கள் எப்படியாவது உங்கள் உறவை நல்ல நிலையில் தக்க வைத்துக் கொண்டால், அதன் பிறகு பிரச்சனைகளின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும். நீங்கள் எதிர்பாரா விதமாக உங்கள் மனைவி/கணவனை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். மேலும் உங்கள் குடும்ப வாழ்க்கை சுமூகமாக செல்ல, உங்கள் மனைவி/கணவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் ஜனவரி 23, 2020 முதல் சஞ்சரித்து உங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல அமைதியான சூழலைத் தருவார். உங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பதினர்களிடம் இருந்து வரும் நாட்களில் நல்ல உதவி கிடைக்கும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நிகழ்த்துவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களை கடந்த நாட்களில் மதிக்காதவர்கள், தற்போது உங்களுடன் நல உறவை உண்டாக்கிக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் குடும்பம் பெப்ரவரி 2020 முதல் நவம்பர் 2020 வரை சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும்.







Prev Topic

Next Topic