குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

நிதி / பணம்


கடந்த ஒரு ஆண்டு காலம் ஜென்ம குரு நடை பெற்றதால் நீங்கள் அதிக பணத்தை இழந்திருப்பீர்கள். பண விடயங்களில், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள். உங்கள் கடன் சுமைகளை சமாளிக்க நீங்கள் ரியல் எஸ்டேட் சொத்துக்களை மிக குறைந்த விலைக்கு விற்றிருப்பீர்கள். தற்போது உங்களுக்கு நிதி நிலையில் ஏற்பட்ட மோசமான பிரச்சனைகளில் இருந்து விடு பட்டு சற்று மூச்சு விட இடம் கிடைக்கும்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் நவம்பர் 4, 2020 முதல் சஞ்சரித்து, சனி பகவான் ஜனவரி 23, 2020 முதல் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையில் சிறப்பான பலன்களையும், முன்னேற்றத்தையும் தருவார்கள். உங்கள் கடன்களை நிதி மறு பரிசீலனை செய்து, கடன் சுமையை குறைக்க இது நல்ல நேரம். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு உயரும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும். உங்களது புது கிரெடிட் கார்டு அலல்து வங்கிக் கடன் விரைவாக குறைந்த வட்டி விகிதத்தில் ஒப்புதல் பெரும்.


இன்சூரன்ஸ் நிறுவனம், வழக்கு அல்லது, முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும். உங்கள் கனவு இல்லத்திற்கு குடி பெயருவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது கார் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகப் படுத்திக் கொள்ள இது நல்ல நேரம். மொத்தத்தில் 2020 உங்களுக்கு நிதி நிலையிலும், நிதி நிலையில் வளர்ச்சி பெறுவதிலும் ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும்.



Prev Topic

Next Topic