|  | குரு பெயர்ச்சி (2019 - 2020) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) | 
| விருச்சிக ராசி | முதல் பாகம் | 
நவம்பர் 04, 2019 முதல் மார்ச் 29, 2020 வரை குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டம் உண்டாகும் (80 / 100)
ஜென்ம குரு காலத்தை முற்றிலுமாக கடந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்! வரும் வருடங்கள் உங்களுக்கு சிறப்பாக உளது. நீங்கள் இந்த காலகட்டத்தில் நீண்ட கால திட்டங்களை போடலாம். உங்கள் அதிர்ஷ்டத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் விரைவாக நிவாரணம் பெற்று, உங்கள் பிறந்த சாதக பலனுக்கு ஏற்றவாறு நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள்/ மேலும் கோச்சார கிரகங்கள் மேலும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் சிறப்பாக செயல் பட உதவும். 
உங்கள் உடல் நல பிரச்சனைகளை விட்டு முற்றிலுமாக வெளி வருவீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் உறவுகளுடன் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகளை காண்பீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள், நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். உங்கள் நண்பர்கள்ம், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 
நீங்கள் புது வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள், பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் பணி புரிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் போதுமான பண வரத்து உண்டாகும். 
பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். உங்களுக்கு வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். உங்கள் நிதி நிலையில் இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து மாதாந்திர தவணையை குறைக்க முயற்சி செய்ய இது நல்ல நேரம். பங்கு சந்தை முதலீடுகள் செய்யலாம். எனினும் ஜனவரி 2020 வரை ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது. 
Prev Topic
Next Topic


















