![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை பொற்காலம் (95 / 100)
நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பொற்காலத்தை பெறப் போகின்றீர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், சனி பகவன் 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் வெற்றி மற்றும் வளர்ச்சியை அதிகப்படுத்துவார்கள். இந்த பாகம் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த மாற்றந்த்தை உண்டாக்கும். உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை உயரும்.
உங்களுக்கு பண மழை பொழியும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு பெரிய கோட்டீஸ்வரர் ஆனாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் எதை செய்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
நீங்கள் காதலில் விழக்கூடும், நல்ல வாழ்க்கைத் துணையை கண்டறிந்து, திருமணம் செய்து கொள்ள இது சிறப்பான நேரமாக உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் இந்த காலகட்டத்தில் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். குழந்தை பேரு பெரும் பாக்கியமும் சிறப்பாக உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், அது இந்த காலகட்டத்தில் நடக்கும். பங்கு சந்தை லாபம், போனஸ் மற்றும் நிதி சன்மானங்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அதனை ஏற்றுக் கொள்ள இது நல்ல நேரம். உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தி மேலும் சிறப்பாக செயல்படுவார்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் புண்ணிய கணக்கை சேர்த்துக் கொள்ள, முடிந்த அளவு தானம் தர்மம் செய்யுங்கள்.
Prev Topic
Next Topic