குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

உடல் நலம்


ஆகஸ்ட் 2019 முதல் உங்களுக்கு ஏறபட்ட உடல் உபாதைகளை பற்றியும், மன உளைச்சல்களை பற்றியும் விவரிக்க வார்த்தைகள் இருக்காது. உங்கள் சொந்த வாழ்க்கையிலும், உத்தியோகத்திலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் உங்கள் சக்தியை விரைவாக எடுத்திருக்கும். சரியான தூக்கம் இல்லாததால், உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும், உடலில் வலி தாங்க முடியாமல், நீங்கள் மயக்கம் அடைந்து விழுந்திருந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
தற்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக நேர்மறை சக்திகளைத் தருவார். நீங்கள் உங்கள் சக்தியை மீண்டும் பெற்று, நல்ல மன நிலையிலும் இருப்பீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் இழந்த தூக்கம் தற்போது உங்களுக்கு கிடைக்கும். சரியான மருந்து கிடைத்து, அனைத்து உடல் நல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமன் சலிச கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.


சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு ஜனவரி 2020 அன்று பெயருகிறார். இதனால் நீங்கள் விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் பிறர் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அழகு குறித்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள இது சரியான நேரம். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நல்ல ஈர்ப்பு சக்தியைப் பெறுவீர்கள். செப்டம்பர் 2020 வாக்கில் நீங்கள் காதலில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.



Prev Topic

Next Topic