குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


காதலர்கள் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை மோசமான பலன்களை சந்தித்திருந்திருப்பார்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் சண்டைகளால், நீங்கள் பிரிந்திருக்கக் கூடும். குரு தற்போது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருவதால், பெப்ரவரி 28, 2020 வரை நீங்கள் மீண்டும் சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலகட்டத்தை நீங்கள் கடந்து விட்டால், அதன் பிறகு, புதிய உறவை உண்டாக்கிக் கொள்ள நீங்கள் தயாராக வேண்டும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் ஜனவரி 2020க்கு மேல் கிடைக்கும். நீங்கள் காதலித்து பிரிந்திருந்தால், இனி வரும் நாட்களில், உங்கள் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடக்க வாய்ப்புகள் உள்ளது. உங்கள் பெற்றோர்களிடம் காதல் திருமணத்திற்கான ஒப்புதல் பெற இது நல்ல நேரம். மார்ச் 30, 2020க்கு முன் அல்லது செப்டம்பர் 15, 2020க்கு பிறகு நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிகளை செய்யலாம்.


திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாகியத்தைப் பெறுவார்கள். IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகளும் உங்களுக்கு நேர்மறை பலன்களைத் தரும். செப்டம்பர் 2020 வாக்கில் நீங்கள் வெகு நாட்களாக செல்ல விரும்பிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதலிலும் விழ வாய்ப்புகள் உள்ளன.



Prev Topic

Next Topic