குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்


ஜென்ம குரு கடந்த 12 மாதங்கள் உங்கள் வளர்ச்சியை பெரிய அளவு பாதித்திருந்திருப்பார். உங்களுக்கு எதிரான சதி மற்றும் அரசியலால், நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். தற்போது மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்களுக்கு பல நல்ல வாய்புகள் கிடைப்பதால், உங்கள் துறையில் பிரகாசிப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் ப்ராஜெக்ட் உங்களுக்கு பெரிய அளவு வெற்றியையும், நல்ல சன்மானங்களையும் பெற்றுத் தரும்.


அதிகரிக்கும் செல்வாக்கு மற்றும் புகழால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் புது படத்தை வெளியிட இது சிறப்பான நேரம். உங்கள் படம் பெரிய அளவு சாதனை புரிந்து நல்ல வசூலையும் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் உறவுகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிலுவையில் இருக்கும் வழக்கு அல்லது வருமான வரி பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, தலைமைப் பதவியைப் பெறுவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் செப்டம்பர் 2020 வாக்கில் முக்கியத்துவர் அந்தஸ்த்தைப் பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic