குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை மிதமான பின்னடைவுகள் (55 / 100)


குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சனி பகவானோடு சேர்ந்து சஞ்சரிப்பார். இந்த பாகத்தில் சில பின்னடைவுகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நல்ல பலனை பெற கடுமையாக உழைக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் உங்கள் நேரம் நன்றாக இருப்பதால், வருத்தப் பட ஒன்றும் இல்லை. பொறுமையோடு அதிகம் உழைக்க வேண்டும். முயற்சிகளும் எடுக்க வேண்டும். நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் அதிக நேரம் செலவிட்டு அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு உங்கள் குடும்பதினர்களிடம் இருந்து தொடர்ந்து உதவி கிடைக்கும்.


அலுவலகத்தில் நிர்வாக அளவில் அரசியல் இருக்கக் கூடும். எனினும் உங்கள் எதிரிகளை விட உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். அதனால் உங்களுக்கு எதிரான அரசியல் மற்றும் சதிகளையும் தாண்டி நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை வெற்றியோடு முடிப்பீர்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு அதிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் அதிகம் நேரம் செலவிட வேண்டிய சூழல் உண்டாகலாம். தொழிலதிபர்கள் தங்கள் ப்ரோஜெக்ட்டை செயல்படுத்துவதில் மும்மரமாக இருப்பார்கள். சுய தொழில் புரிவோர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள்.
உங்கள் நிதி நிலை சுமாராக இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். அதை தொடர்ந்து செலவுகளும் அதிகமாக இருக்கும். வங்கி கடன் வாங்க முயற்சி செய்வது நல்ல யோசனையாக தற்போது இருக்காது. உங்கள விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெறுவதில் தேக்கம் ஏற்படலாம். இதனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உங்கள் விண்ணப்பம் இருக்கும். வெளி நாட்டு பயணத்தை இந்த பாகத்தில் தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை வர்த்தகம் நீண்ட கால முதலீடுகள் செய்தவர்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் அதிக நட்டத்தை உண்டாக்கக் கூடும்.




Prev Topic

Next Topic