குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை நல்ல மாற்றங்கள் (65 / 100)


குரு மீண்டும் தனுசு ராசிய்க்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை இந்த பாகத்தில் தருவார். இந்த பாகத்தில் உங்களுக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவி/கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சரி செய்து விடுவீர்கள். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த திட்ட்டமிடுவதில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
இந்த காலகட்டத்தில் உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை ஆகிய இரண்டையும் எளிதாக சமாளிப்பீர்கள். தற்போது இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையென்றால் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு செப்டம்பர் 2020 வாக்கில் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நிலைக்கும் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சம்பளம் உயர்வதாலும், போனஸ் கிடைப்பதாலும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் செப்டம்பர் 2020 வாக்கில் வெளிநாட்டிற்கு குடி பெயருவீர்கள். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.


உங்கள் நிதி நிலை பெரும் அளவு முன்னேற்றம் பெரும். உங்கள் கடன் குறைந்து கொண்டே போகும். வங்கி கடன் எளிதாக ஒப்புதல் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். பங்கு சந்தை பரிவர்த்தனைகள் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.



Prev Topic

Next Topic