குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் மற்றும் விசா குறித்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திருப்பார். பயணத்தால் நீங்கள் அதிக பணத்தை இழந்திருப்பீர்கள். வரும் நாட்களில் குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், விடயங்கள் நல்ல நிலைக்கு மாறும். பயண சீட்டு முன் பதிவு, தங்கும் விடுதி முன் பதிவு மற்றும் வாடகைக்கு வாகனம் எடுப்பது போன்ற விடயங்களில் நீங்கள் நல்ல சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு செல்லும் இடத்தில் நல்ல தங்கும் வசதி கிடைக்கும்.
விசா குறித்த பிரச்சனைகள் இருந்தால், அது விரைவாக உங்களுக்கு சாதகமான முறையில் சுமூகமான தீர்வு பெரும். உங்களுக்கு வெளிநாட்டிற்கு பயணம் செய்ய நல்ல வாய்புகள் கிடைக்கும். விசா ஸ்டம்பிங் செய்யவும், H1B விரிவாக்கம் செய்யவும் இது நல்ல நேரம். ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து அல்லது கனடா போன்ற நாடுகளில் நிரந்திர குடியுரிமை பெற விண்ணபிக்க 2020ஆண்டின் தொடக்கத்தில் முயற்சி செய்யலாம். புது வாகனம் வாங்குவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.




Prev Topic

Next Topic