![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வேலை மற்றும் உத்தியோகம் |
வேலை மற்றும் உத்தியோகம்
ஜென்ம குரு உங்கள் உத்தியோகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் கடந்த ஒரு ஆண்டு அதிகம் பாதிப்புகளை உண்டாக்கி இருந்திருப்பார். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் வேலையை இழந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் மோசமான சூழலில், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து அக்டோபர் 30, 2019க்கு முன்னதாகவே உங்கள் தாய் நாடு திரும்பி இருப்பீர்கள். உங்களுக்கு எதிர் பார்த்த போனஸ் மற்றும் சன்மானங்கள் கிடைக்காததால், அதிக ஏமாற்றங்களையும் சந்தித்திருந்திருப்பீர்கள்.
தற்போது நீங்கள் அந்த மோசமான காலகட்டத்தை உங்கள் வாழ்க்கையில் கடந்து விட்டதால், மகிழ்ச்சியாக இருக்கலாம். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். இதனால் உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீங்கள் தற்போது வெளிய இல்லாமல் இருந்தால், அல்லது மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், உங்களுக்கு மார்ச் 2020க்கு முன் நல்ல சம்பளத்தில், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வரும் நாட்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரோஜெக்ட்டில் வேலை பார்க்க வாய்புகள் கிடைக்கும். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.
உங்களுக்கு நல்ல நிதி சன்மானங்கள் கிடைக்கும். மேலும் செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் உங்களது கடின உழைப்பிற்கான அங்கிகாரமும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்திலேயே உங்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் இடமாற்றமோ அல்லது வெளிநாட்டில் வேலையோ, உங்களுக்கு விரும்பிய படி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது, அரசு வேலை கிடைக்கவும் உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. சனி பகவான் அடுத்த 3ஆண்டுகளுக்கு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீண்ட கால அடிப்படையில் உங்கள் உத்தியோகத்தில் நல்ல நிலையில் நீங்கள் செட்டில் ஆவீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic