குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை பல சூழல்களில் பாதித்திருந்திருக்கக் கூடும். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை அதிக கசப்பான அனுபவங்களையும், அவமானங்களையும் நீங்கள் சந்தித்திருந்திருப்பீர்கள். இதை மேலும் மோசமாக்கும் விதமாக, ஏழரை சனியின் இறுதி பாகமாக, உங்களுக்கு நிதி பிரச்சனைகள் அதிகமாகக் கூடும், ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து, விசா அல்லது வெளி நாடு செல்வது போன்ற விடயங்களில் பிரச்சனைகளை அதிகமாக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆன்மிகம் மற்றும் த்யானம் போன்றவற்றால் உங்களுக்கு சில நிவாரணத்தை தரக் கூடும்.
உங்களுக்கு தற்போது நல்ல செய்திகள் என்னவென்றால் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிகின்றார். ஜனவரி 23, 2020 அன்று ஏழரை சனி காலத்தை விட்டு நீங்கள் முற்றிலும் வெளி வந்து விடுவீர்கள். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் சஞ்சரிபதால், நவம்பர் 2019 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு இருந்த மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சூழல்களில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுக்கு அதிக நேர்மறை சக்திகள் கிடைக்கும்.


நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த நிலைக்கு வந்திருப்பீர்கள். அதனால், ஒரே இரவில் இந்த குரு பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்று எதிர் பார்க்க முடியாது, முதல் ஒரு சில மாதங்கள், நீங்கள் சமீப கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களை ஜீரணிக்க எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்களுக்கு பல விடயங்களில் நல்ல சிறப்பான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படத் தொடங்கும். மொத்தத்தில் 2020 உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான வருடமாக இருக்கும்.


Prev Topic

Next Topic