![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
ஆகஸ்ட் 2019 வாக்கில் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு ஏற்படவிருந்த அழுத்தமான சூழலில் இருந்து சற்று நிவாரணம் தந்திருக்கலாம், எனினும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நீண்ட காலமாக உங்கள் வளர்ச்சியை பாதித்திருந்திருக்கக் கூடும். குரு தற்போது 8ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் நிலையை மேலும் மோசமாக்கக் கூடும். நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மோசமாக உள்ளது. உங்கள் பங்குதாரருடனும், வாடிக்கையாலர்களுடனும் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். வழக்குகள் கூட உங்கள் மீது போடப்படலாம்.
உங்களுக்கு எதிரான சதி, துரோகம், அரசியல் அதிகமாக இருக்கும். உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த உங்கள் பிறந்த சாதக பலன் நன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தொழிலை சரியாக நடத்த முடியாமல், பணத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். உங்கள் வங்கி கணக்கு திவாலானாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. போட்டியாளர்களால் நீங்கள் நல்ல ப்ரோஜெக்ட்டுகளை இழக்க நேரிடலாம். உங்கள் சொத்துக்களை விற்றோ அல்லது கடன் வாங்கியோ உங்கள் நிர்வாக செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகலாம்.
நீங்கள் உங்களது புதுமையான யோசனைகளை முதலீடாலர்களிடமோ அல்லது முதலாளிகளிடமோ கூறினால், அவர்கள் உங்களுக்கு ப்ரோஜெக்ட்டுகளை தராமல் போகலாம, ஆனால், உங்களது யோசனைகளை அவர்கள் திருடி, அவர்களாகவே அதனை செயல்படுத்த முயற்சிப்பார்கள். உங்கள் முதுகில் குத்துவது உங்கள் மன நிம்மதியை பாதிக்கும். சுய தொழில் புரிவோரர்கள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். அதிக பணத்தை இழக்கும் சூழல் உண்டாவது மட்டுமல்லாமல், உங்கள் நற்பெயரையும் இழக்க நேரிடலாம்.
Prev Topic
Next Topic