![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு சவால்கள் அதிகம் இருக்கும். உங்கள் மனைவி/கணவன், மற்றும் அவரது குடும்பத்தினர்கள், மற்றும் உங்கள் பெற்றோர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்படக் கூடும். உங்களிடம் மிக நெருக்கமாக இருப்பவர்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். குடும்பத்தில் இருக்கும் அரசியல் அதிகரிக்கும். இது உங்கள் மன நிம்மதியை முற்றிலும் எடுத்து விடும்.
குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். மேலும் உங்களிடம் புதிதாக பல தேவைகளை முன் வைப்பார்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் அதிக நேரம் செலவிட்டு அவர்களது தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்வது முக்கியம். திருமண முயற்சிகள் எடுக்கவும், அல்லது சுப காரியங்கள் நிகழ்த்தவும் இது ஏற்ற நேரம் இல்லை.
உங்கள் குடும்பத்தினர்களுடன் விவாகரத்து, குழந்தை காவல் அலல்து சொத்து குறித்த பிரச்சனைகள் இருந்தால், விடயங்கள் உங்களுக்கு எதிராக போகக் கூடும். நீங்கள் உங்கள் வழக்கை இழந்து அதிக பண இழப்பையும் மன வலியையும் சந்திக்க நேரிடலாம். நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை நீங்கள் அவமானப் படும் சூழலும், அவப்பெயர் உண்டாகும் சூழலும் உண்டாகலாம். எனினும் ஏப்ரல் 2௦2௦ முதல் அடுத்த 4 மாதங்களுக்கு உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic